நவகிரக தோஷங்களை நீக்கும் கோளறு பதிகம் | பலன் தரும் பதிகங்கள் | சிவன் பாடல் | Sivan Song
Emusic Abirami Emusic Abirami
1.2M subscribers
1,187,053 views
0

 Published On Dec 3, 2018

அபிராமி ஆடியோ பெருமையுடன் வழங்கும் கோளறு பதிகம் - பலன் தரும் பதிகங்கள் - சிறப்பு சிவன் பாடல்கள்...

கோளறு பதிகம் என்பது சிவபெருமானை நினைத்து திருஞான சம்பந்தர் அடிகளாரால் பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும்.

மதுரை அரசி மங்கையர்க்கரசி அழைப்பை ஏற்று மதுரை செல்லக் கிளம்பினார். அப்போது அந்த நாள் நல்ல நாள் இல்லை என்று அவர் பயணத்தை தடுத்தார் திருநாவுக்கரசர்.

இறைவன் அடியார்களுக்கு எல்லா நாட்களுமே நல்ல நாட்கள்தான் என்று சொல்லி கோளறு பதிகம் என்னும் இந்த பத்து பாடல்களைப் பாடியருளினார் திருஞான சம்பந்தர் .

பத்து பாடல்களின் தொகுப்புக்குப் பதிகம் என்று பெயர். இதில் பதிகப் பயனுடன் சேர்த்து மொத்தம் பதினொரு பாடல்கள் உண்டு. இந்தப் பதிகத்தைப் படித்தால் கோள்கள் எந்த நேரத்திலும் நன்மையே பயக்கும் என்பது மக்கள் நம்பிக்கை.

கிரகங்களினால் ஏற்படும் தோஷம் நீங்க நம்மில் பலர் வேண்டாதனவற்றை எல்லாம் செய்து மேலும் மேலும் துன்பத்திற்கே ஆளாகின்றார்கள்.

இதையெல்லாம் விடுத்து இப்பதிகத்தை பக்தி ஷ்ரத்தையுடன் காலையும் மாலையும் கோளறு பதிகத்தை பாராயணம் செய்தால் எல்லா வித தோஷங்களும் நீங்கும் என்பது ஞானப்பால் உண்ட திருஞானசம்பந்தருடைய அருள் வாக்காகும்.

பாடியவர் & இசை : வீரமணி கண்ணன்
பாடல் : திருஞானசம்பந்தர்

எங்களை பற்றி மேலும் அறிய: www.abiramionline.com

Subscribe செய்ய:    / @abiramiemusic  

show more

Share/Embed