தொழில் விருத்தியடைய | வாசி தீரவே காசு நல்குவீர் பதிகம் | பலன் தரும் பதிகங்கள் | Sivan Songs
Emusic Abirami Emusic Abirami
1.19M subscribers
4,921,316 views
0

 Published On Jan 6, 2019

திருச்சிற்றம்பலம்!

வாசி தீரவே, காசு நல்குவீர் !
மாசில் மிழலையீர் ! ஏசல் இல்லையே.
இறைவர் ஆயினீர் ! மறைகொள் மிழலையீர் !
கறை கொள் காசினை முறைமை நல்குமே !
-------திருஞானசம்பந்தர்

திருத்தலங்கள் தோறும் யாத்திரையை மேற்கொண்ட திருஞான சம்பந்தர், திருவீழிமிழலையில் தங்கி இருந்து பெருமானை வணங்கிப் பல பதிகங்கள் பல அருளிச் செய்யலானார். அவரோடு திருநாவுக்கரசரும் உடன் இருந்து இறைவனை வணங்கி மகிழ்ந்தார். அக்காலத்தில் வான் மழை பொய்த்து, நிலம் வறண்டு, விளைச்சலும் குறைவுற்று வறுமையுண்டாயிற்று. மக்கள் பசித் துன்பத்தால் வருந்தினார்கள்.
சம்பந்தர் கனவில் ஈசன் தோன்றி, நிலவுலகத்தின் இயல்பால் வறுமை வந்தடைந்தாலும், தீமை பயக்கும் பசி நோய் சம்பந்தர் மற்றும் நாவுக்கரசரை வந்து அடையாது என்றும் ஆயினும் அவர்களைச் சார்ந்தோர் பசி நோயால் வருந்தாதவாறு பலிபீடத்தின் மீது தினமும் பொற்காசு ஒன்றினை அளிப்பதாகவும், அதன் வாயிலாக இத்துன்பத்தை தவிர்த்துக் கொள்ளலாம் என அருளினார்.
அப்பொற்காசைக் கொண்டு தடையின்றி திருவமுது தினமும் நடைபெற்றது. ஆனால் பொற்காசு மாற்றுக்குறைந்த தன்மையில் இருந்ததால் திருவமுது படைப்பது தினமும் தாமதமானது.
மாசு நீங்கிய பொற்காசு அருளுமாறு இறைவனிடம் வேண்டிக்கொண்டதே இப்பதிகம்.

தென்னாடுடைய சிவனே போற்றி !
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!

மேலும் பல பாடல்களை கேட்டு ரசிக்க: https://goo.gl/I5ETQS

எங்களை பற்றி மேலும் அறிய: www.abiramionline.com

Subscribe செய்ய: http://www.youtube.com/channel/UCHgmH...

show more

Share/Embed