ஸ்டிரிங்ஸ் என்னும் சேனலில் என் நேர்காணல் - பாங்காக்கில் எடுத்தது
37,694 views
0

 Published On Premiered Dec 13, 2023

ஸ்டிரிங்ஸ் என்னும் சேனலில் என் நேர்காணல் - பாங்காக்கில் எடுத்தது
----------------------------------------------------------------------------------------------------------
(ஆங்கிலத்தில் உள்ளது)

சமீபத்தில் வோர்ல்ட் இந்து காங்கிரஸில் பேச பாங்காக் சென்ற பொழுது நான் ஸ்டிரிங்க்ஸ் என்கிற யுட்யூப் சேனலை நடத்தி வரும் ஶ்ரீ வினோத் என்னும் இளைஞனை சந்தித்தேன்.

இவருடைய யுட்யூப் சேனலை யுட்யூப் டிலீட் செய்துவிட்டது என்று அறிந்தேன். இளைஞரான இவர் தன் மனதில் பட்டதை ஆணித்தரமாக ஆக்ரோஷமாக பேசியதால் இவர் மீது சிலர் "ஸ்டிரைக்" கொடுத்து இவர் சேனலை முடக்கி விட்டனர்.

இவர்களைப் போன்ற இளைஞர்களை உங்களைப் போன்றவர்கள் ஊக்கபப்டுத்தினால் எதிர்காலத்தில் நாம் பிழைக்க வழி வரும்.

இளைஞராக இருக்கும் காலத்தில் அவர்கள் ஜ்ஞானம் வளர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் சில பிழைகளை அவர்கள் செய்யலாம். அவர்கள் வயதில் அது சரியாக தோன்றும். ஆனால் காலப் போக்கில் அவர்கள் மேம்பட்டு வளர்வார்கள் என்பது அனுபவம் கொடுத்த பாடம்.

3 லக்ஷத்திற்கும் மேலான பாலோயர்ஸை இவர் ட்விட்டரில் பெற்றிருந்தாலும், அவர் யுட்யூப் சேனல் முடக்கப்பட்ட போது 2000 பேர்கூட அவருடைய ஓ.டி.டி. சேனலுக்கு சந்தாதாரராக ஆகவில்லை. இதுதான் நிதர்ஸனம்.

பலரும் நான் "சப்போர்ட்" செய்கிறேன் என்று சொல்லும் பொழுது "சப்போர்ட்" என்றால் என்ன என்று நான் கேட்பது இதனாலதான். வெறுமனே ஒரு சேனலை தொடர்வதும், லைக் செய்வதும், பார்வேட் செய்வதும் சப்போர்ட் ஆகிவிட முடியாது.

ரூ .99 ஒரு மாதம் கொடுத்து இளைஞரை ஊக்கப்படுத்துவது சப்போர்ட். நான் எனக்கு என்றும் கேட்டதில்லை. ஆனால் வரும் கால இளைஞர்களை நீங்கள் ஆதரிக்கவில்லை என்றால் அது உங்களுக்குத்தான் நஷ்டம்.

உங்களில் ஒரு 1000 பேர் இவருடைய சேனலுக்கு www.stringsgeo.com என்கிற இணையதளத்தில் சந்தாதாரராக ஆகினீர்கள் என்றால் அது எனக்கு சந்தோஷத்தை அளிக்கும்.

ஜெய் ஶ்ரீ ராமாநுஜா!

show more

Share/Embed