வளர் பிறை பஞ்சமி சிறப்பு வெளியீடு | ஸ்ரீ வாராஹி 1008 போற்றி SRI VAARAAHI 1008 POTRI | SRE BAKTHI
SRE BAKTHI SRE BAKTHI
328K subscribers
3,211 views
0

 Published On Feb 13, 2024

வளர் பிறை பஞ்சமி சிறப்பு வெளியீடு

ஸ்ரீ வாராஹி 1008 போற்றி

பாடியவர் : காயத்ரி

இசை மற்றும் பாடல் : வாரஸ்ரீ

படத் தொகுப்பு : வாரஸ்ரீ

ஸ்ரீ பக்தி

SRI VAARAHI 1008 POTRI

SUNG BY : GAYATHRI

MUSIC AND LYRICS : VAARASREE

VIDEO EDITING : VAARASREE

SRE BAKTHI

அன்னை ஸ்ரீ மஹாவாராஹி மஹாசத்தியான துர்கா அல்லது ராஜராஜேஸ்வரியிடம் இருந்து தோன்றியவள். இவளே ராஜராஜேஸ்வரியின் படை தலைவி ஆவாள் பராசக்தியின் 7 வடிவங்களில் ஒரு வடிவம் வராஹி வடிவமாகும். வராஹி போர் கடவுளாவாள். வராஹி வழிபாடு வெற்றியை தருவதாக ஐதீகம். தோல்விகள் அவமானங்கள் போன்றவற்றில் இருந்து வராஹி வழிபாடு காப்பாற்றும் என்பது ஐதீகம். ஸ்ரீ வராஹி உபாசனை சிறந்த வாக்கு வன்மை தைரியம் தருவதோடு எதிர்ப்புகளை சந்தித்து வெற்றி பெரும் ஆற்றலை தருகிறது. இந்த தெய்வம் நேபாளத்தில் பாராஹி என்றும் புத்த மதத்தில் வஜ்ரவராஹி அல்லது மறிச்சி என்றும் அழைக்கப்படுகிறாள்
.
எருமை வாகனத்துடனும் பன்றி முகத்துடன் கூடிய இந்த பெண் தெய்வம் பெருமாம்பாளும் தாந்த்ரீக வழிபாட்டிற்கு மட்டுமே வழிபட்டு வரப்படுகிறது. மஹாசக்தியான துர்கா தேவியானவள் ரத்தபீஜன் என்கிற அரக்கனுடன் போரிடும்போது தன்னுள் இருந்து மஹாசக்தியை ஏழு பாகங்களாக பிரித்து போர் களத்துக்கு அனுப்புகிறாள் வராஹி அதில் ஒருவளாக இருக்கிறாள். தாந்திரிக முறைப்படி வழிபடப்படுவதால் இந்த தெய்வத்தாய் இரவு நேரங்களில் தான் வழிபடுவர். . இந்தியாவிலேயே வாராஹிக்கு சிறப்பான கோவில் ஒடிசா மாவட்டத்தில் உள்ளது

வட மாநிலங்களில் இவள் பாதாள பைரவியாக வணங்கப்படுகிறாள். தமிழகத்தில் சென்னை மைலாப்பூரிலும் கோவையிலும் வாராஹிக்கு கோவில்கள் உள்ளன. இங்கு பூஜைகள் எப்போதும் அம்மாவாசை பௌர்ணமி தினங்களில் மட்டுமே விமர்சையாக நடைபெறும். வாராஹி கண் த்ரிஷ்டியை போக்கக்கூடியவள், பயத்தை அகற்றி தைரியத்தை தருபவள் வாராஹி. வராஹி தேவியை புருவ மத்தியில் தியானித்து புதன் மற்றும் சனி கிழமைகளில் வழிபட வேண்டும். வாராஹிக்கு மிளகு வடை, வெண்ணை எடுக்காத தயிர் சாதம் சுண்டல் சுக்கு சேர்த்த பணக்கம் போன்றவற்றை அளிக்கலாம். எழுப்பு சம்பந்தமான பிராச்சனைகள் வாராஹியை வழிபட்டால் தீரும்.

show more

Share/Embed