தொல்காப்பியமும் நடுகல் கல்வெட்டுகளும்: 'சரித்திரச் செம்மல்' திரு ச. கிருஷ்ணமூர்த்தி. செப் 17, 2022
YouTube Viewers YouTube Viewers
8.41K subscribers
2,173 views
0

 Published On Sep 17, 2022

தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை வழங்கும் மாதாந்திர தமிழ்ப் பேச்சு:

தலைப்பு: "தொல்காப்பியமும் நடுகல் கல்வெட்டுகளும்"

பேச்சாளர்: 'சரித்திரச் செம்மல்' திரு ச. கிருஷ்ணமூர்த்தி

தேதி: செப்டம்பர் 17, 2022 மாலை 5.30 மணி

இந்த சொற்பொழிவில், திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தமிழ் எழுத்துக்கள் தொடர்பாகச் தொல்காப்பியத்தின் சொல்லதிகார சிறப்பு, பொருளதிகாரம் மூலம் நடுகல் குறித்த விளக்கம், 100க்கும் மேல் கிடைத்துள்ள பல்லவர் கால வட்டெழுத்து நடுகற்கள், பாண்டியர் சோழர் கால நடுகற்களின் விவரங்களுடன், நடுகல் கள ஆய்வில் தன் அனுபவங்களைப் பற்றியும் பகிர்ந்து கொள்வார்.

பேச்சாளர்:

திரு ச. கிருஷ்ணமூரத்தி தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் தொல்லியல் அலுவலராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். தமிழ்த்தாத்தா உவேசா போல ஓலைச்சுவடிகளைச் சேர்த்து ஆராய்ச்சி செய்வதில் ஈடுபாடுகொண்டவர். தொல்லியல் துறைக்காக ஆயிரக்கணக்கான சுவடிகளையும், கையெழுத்துப் பிரதிகளையும் சேர்த்துத் தந்துள்ளார்.

பல நூல்களை எழுதிப் பதிப்பித்துள்ளார். இவரது நடுகற்கள் நூல் ஆய்வாளர்களுக்கு பயன்படும் வகையானது. தமிழ்நாட்டுச் செப்பேடுகளைப் பற்றி தொகுதி 1, தொகுதி 2 என இரு பாகங்களாக இவர் எழுதியது குறிப்பிடத்தக்கது. பல அகழாய்வு பணிகளில் ஈடுபட்டவர். கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள் பற்றி பலநூல்களையும், கட்டுரைகளையும் எழுதியவர்.

தமிழ் வளர்ச்சித் துறை உவேசா விருது, கலை இலக்கியப் பெருமன்ற விருது, சரித்திரச் செம்மல் விருது என பலவிருதுகளையும், பரிசுகளையும் குவித்தவர்.

தயவுசெய்து இந்த சேனலுக்கு subscribe செய்யவும். மேலும் எஙகள் எதிர்கால நிகழ்ச்சிகள் பற்றிய அறிவிப்புகளைப் பெற Bell ஐகானைக் கிளிக் செய்யவும்

Mail: [email protected]
http://www.tamilheritage.in
  / tamilheritagetrust  

=============================================


Tamil Heritage Trust's in-person Talk in Tamil is scheduled for 5.30 pm on Saturday, September 17, 2022.

The speaker, 'Sarithira Semmal' S Krishnamoorthy, speaks on "Tholkappiyamum Nadukal Kalvettukkalum" (Tolkappiyam and Hero Stone Inscriptions).

Sri Krishnamoorthy will introduce the tradition of Hero Stones in Tamil Nadu and explain the significance of the inscriptions found on them in the context of the Tolkappiyam, the ancient grammatical treatise of Tamil. He will describe some examples from the 100+ Hero Stones of the Pallava times as well as others from Pandya and Chola periods and also share his experences from the field research he has conducted in this area.

Mr. S. Krishnamoorthy retired from the Tamil Nadu Government Archaeology Department. He has collected thousands of manuscripts for reasearch. He has written and published several books on Hero Stone inscriptions and copper plate inscriptions and has participated in several excavations. He has been conferred many awards, including the Uvesa Award, Tamil Ilakkiyam Forum Award and the title of "Sarithira Semmal".

show more

Share/Embed